பரமக்குடியில் உலக மகளிர் தின விழா
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மலர் கிராம நல அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
ஐ நா சபையின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்த இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை செய்துவரும் மலர் கிராம அறக்கட்டளை சார்பில் நேற்று (08-03-2024) மாதவன் நகரில் நடைபெற்றது .
முன்னதாக மலர் கிராம நல அறக்கட்டளையின் நிறுவனர் பவித்ரா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பரமக்குடி அரசு ITI இளநிலை பயிற்சி அலுவலர் செபாஸ்டின் ரூபி தலைமையேற்று மகளிர் அனைவரும் அறிவுசார் கலைத் திறனை வளர்த்துக் கொண்டு கொலோச்சினால் மட்டுமே நாடு வல்லரசு ஆகும் என்று கூறி மகளிர் தின வாழ்த்து கூறினார்.
பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஹார்சிட்டி திட்டத்தின் இராமநாதபுரம் மாவட்ட இயக்குனர் ராஜ ரத்தினம் பேசுகையில் ஐ நா சபை தந்துள்ள இந்த ஆண்டுக்கான மகளிர் தின விருதுவாக்கு பெண்களில் முதலீடு செய்து அவர்களின் வளர்ச்சியை வேகப்படுத்துங்கள் என்பதனை குறிப்பிட்டு, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஏற்படுத்து தரும் பல்வேறுபட்ட தொழில் முனையும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு மென்மேலும் வளர மகளிர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
மலர் கிராம நல அறக்கட்டளை நடத்தும் தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்பின் மாணவியரின் கலை நிகழ்ச்சிகளின் போது இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, மிசன் சக்தி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். மதுரை வேவ்ஸ் இன்னோவேசன் அமைப்பின் தலைவர் கலையழகன் சிறு குறு தொழில் முனையும் பெண்களே நீங்கள் அனைவருமே விரைவில் பெரும் தொழில் அதிபர்கள் என்ற நிலைக்கு வர வேண்டும் என்று சொல்லி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மலர் கிராம நல அறக்கட்டளை களப் பணியாளர் பானு நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தன்னார்வளர் தண்டாயுதபாணி சிறப்பாக செய்திருந்தார்.
Leave a comment